Monday 10 April 2017

ஆடைக‌ளி‌ன் பாதுகா‌ப்‌பி‌ற்கு

ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.

பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.

உங்களுக்கு இந்தியத் தோற்றம் வேண்டுமானால், பாந்தினி வேலை பார்டரில் செய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, சாதாரண கலர் சட்டை உடன் அணியலாம். பாந்தினி பெல்ட் மற்றும் ஸ்கார்ஃப் அணியலாம்.

கற்பனை வளம் மிக்கவர்கள் டெனிம் கடையில் லேஸ்வைத்து தைத்துக் கொள்ளலாம். அல்லது டெனிம்மில் தங்க, வெள்ளி நிற நூல் வேலைகள் வைத்து தைத்துக் கொள்ளலாம். டேனிம் துணியை மேலும் அழகு படுத்துவது இப்போது பேன்சி ஆகி விட்டது.

No comments:

Post a Comment