Friday 31 March 2017

கவண் - திரைப்படமா? காவியமா?

கவண் திரைப்பட குழுவிற்கு முதலில் வாழ்த்துக்கள்.

கவண் - ஊடகங்களை வெளுத்துவாங்கிய திரைப்படம். ஒரு நல்ல காரியத்தில் இறங்கும் இளைஞனை (அப்துல்லாவை) மீடியாவும், காவல்துறையும் சேர்ந்து எப்படி தீவிரவாத பட்டம் சுமத்துகிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

அநீதிக்கு எதிராக விஜய்சேதுபதி பத்திரிக்கையாளராக களம் இறங்கியுள்ளார். நடிப்பில் பின்னியிருக்கிறார்.

அப்துல்லா என்ற கேரக்டரில் விக்ராந்த் நடிப்பும் மிக அருமை.

மீடியாவால் தீவிரவாத பட்டம் பெற்ற அப்பாவி விக்ராந்தின் வசனம், "பாகிஸ்தானும், இந்தியாவும் பிரிகிற நேரத்தில் முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு என்று எங்களுக்கு அழைப்பு கொடுத்த போது இந்தியா எங்கள் தாய் நாடு என்ற முழக்கத்தோடு இங்கேயே இருந்தோம். தேசப்பற்றை நிரூபித்தோம்" என்றதும் திரையரங்கில் கைதட்டலும்,விசில் சத்தமும் ஆர்ப்பரித்தது.

விக்ராந்தின் நண்பர்களில் நால்வரில் ஒருவர் பெயர் முருகன். அந்த முருகனை பார்த்து அப்துல்லா(விக்ராந்த்) சொல்வார், "முருகா! நாங்கதான் தீவிரவாதி பட்டத்துடன் ஒட்டிக்கிட்டு இருக்கோம். எப்ப சாவுனு தெரியல நீ போய்டு முருகா!" என்றதும், முருகன் சொல்வார், "அந்த பிரச்சனைய எல்லாரும் சேர்ந்துதான் துவங்கினோம். இப்போ உனக்கு பிரச்சனைன்னு வந்ததும் என்னை போக சொல்ற. இங்க நாம அண்ணன் தம்பியாகத்தான்
வாழுறோம். உனக்கு பிரச்சினைனு வந்தா நான் போகமாட்டான்." என்றதும் கைத்தட்டல் காதை கிழித்தது.

#கவண் - இதை ஒரு அற்புத காவியமாகத்தான் நான் பார்க்கிறேன். கவண் திரைப்பட இயக்குனருக்கும், நடிகர்களுக்கும், குழுவிற்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சொல்வோம்.

No comments:

Post a Comment